Wednesday, 4 April 2018

திருமண தடை நீக்கும் ஸ்லோகம்

திருமண தடை நீக்கும் ஸ்லோகம்

திருமணமாக வேண்டிய கன்னிகைகள் இத்துதியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்துவர அவர்களுக்கு தேவியின் திருவருளால் விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

பாலார்க்காயுதஸுப்ரபாம் கரதலே ரோலம்ப மாலாகுலாம்
மாலாம் ஸந்தததீம் மனோஹரதனும் மந்தமிதீத்யந்முகீம்
மந்தம் மந்தமுபேயுஷீம் வரயிதும் ச்ம்பும் ஜகன்மோஹினீம்
வந்தே தேவமுனீந்த்ர வந்திதபதா மிஷ்டார்த்ததாம் பார்வதீம்
ஸ்வயம்வரா பார்வதி ஸ்துதி

பொதுப் பொருள்:

தேவர்களாலும், ரிஷிகளாலும் வணங்கப்படும் திருப்பாதங்களை உடையவளும், உதிக்கும் சூரியனைப்போன்று பிரகாசம் உடையவளும் பூக்களால் தொடுத்த  மாலையை தன் திருக்கரங்களில் ஏந்தியவளும், அழகான பூக்களால் தொடுத்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவளும் தன் புன்னகையால் உலகத்தையே  வென்றவளும் வெட்கத்தால் மெதுவாகவும், அழகாகவும் வந்து சிவனை தன் கணவராக தேர்ந்தெடுத்த ஸ்வயம்வரா பார்வதியை வணங்குகிறேன்.

No comments:

Post a Comment