108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த கள்ளழகர் திருக்கோவிலாகும். இக்கோவில் திருமாஞ்சோலை என்றும், தென் திருப்பதி என்றும் போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் கருணை நிறைந்த கோவிலாகும். இக்கோவிலானது தனிச்சிறப்பும் பெருமையும் நிறைந்த ஸ்தலம் என்பதில் ஐயமில்லை.
இந்தக் கோவிலின் காவல் தெய்வமாக விளங்கி அருள்பாலித்து வருவது பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலாகும். இங்கு பக்தர்கள் சந்தனம் சாத்தும்படி செய்து தங்களது வேண்டுதலை நிறை வேற்று வார்கள். கள்ளழகர் கோவிலில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூமி தேவி, சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் பஞ்சாயுதங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவில் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். இன்றளவும் இப்பகுதி விவசாயி கள் தங்கள் விளை நிலங்களில் விளையும் தானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இக்கோவிலின் அழகர்மலை உச்சியில் அடி வாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இரவு பகலாக எப்போதும் வழித்துக் கொண்டிருக்கும் புனித தீர்த்தமாகும்.
இந்த தீர்த்தமானது எங்கிருந்து வருகிறது என்று எவரும் அறிந்தது இல்லை. இத்தீர்த்தமானது பெருமாளின் சிலம்பில் இருந்து வெளியேறி வருவதால் சிலம்பாறு என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் நீராடிய பெருமை படைத்தது இந்த நூபுர கங்கை தீர்த்தமாகும். ஆண்டிற்கு ஒருமுறை மதுரை வைகை ஆற்றில் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவார்.
உலக அளவில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் அன்று இந்த கண் கொள்ளாக்காட்சியை கண்டு தரிசனம் செய்வார்கள். மதுரை யில் இருந்து அழகர் கோயில் 21 கி.மீ தூரம் அழகர்மலை அடிவாரத்தில் அமையப்பெற்றுள் ளது. இயற்கை எழிலும், பொழுது போக்கும் சிறந்த சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. தினமும் நம்நாட்டைச் சேர்ந்த வர்கள் தவிர, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஏராள மானோர் வந்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment