முருகப்பெருமான், சூரபத்மன் மீது படையெடுத்து வந்தார். வழியில் எதிர்ப்பட்ட சூரனின் தம்பி தாரகாசுரனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்ச மலையையும் அழித்தார். தன் படைகளுடன் 'அலைவாய்' என்று புகழப்பட்ட திருச்செந்தூரில் வந்து தங்கினார். விஸ்வகர்மா இவருக்கு ஆலயம் அமைத்துக்கொடுக்க, அதில் தங்கிக்கொண்டார் செந்தில் வேலவன்.
அப்படி வந்து தங்கிய குமரப்பெருமானை வியாழ பகவான் வந்து பூஜித்தார். தன்னைப் பூஜித்த வியாழ பகவானிடம் அசுரர்களின் வரலாற்றைக் கூறும்படி முருகப்பெருமான் கட்டளையிட்டார். முருகப்பெருமானுக்குக் கூறுவதுபோல் வியாழ பகவான் கதையை நமக்குச் சொல்கிறார். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் பிரசித்தி பெற்ற வியாழ (குரு) க்ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது.
ஜாதகத்தில் குருவின் பலம் குன்றியவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், படிப்பில் சிறந்து விளங்கவும் திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானை வழிபட்டால் தோஷங்கள் விலகுவதாக ஐதீகம்.
No comments:
Post a Comment