Saturday 30 December 2017

கடவுள் கை நீட்டியது ஏன் ?


தேவலோகமே மகாபலியால் அல்லல்பட்டு கொண்டிருந்தது. தேவர்களைக் காக்க விஷ்ணு வாமனராக அவதாரம் எடுத்தார். மகாபலி நடத்தும் யாகசாலைக்குச் சென்று மூன்றடி நிலம் யாசகம் கேட்டார். ஒரு மனிதன் பிறரிடம் கைநீட்டி யாசிப்பது மிகவும் அற்பமான காரியம் என்பது உலகியல். யாசிக்க செல்பவனின் கை நடுங்கும். வாய் குழறும். உடம்பெல்லாம் வியர்க்கும். என்ன கேட்பதென்பதே தெரியாது. "நான்....நான்' என்று சொல்வது தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றாது. உயிர் நீங்கும் போது, என்ன சிரமம் உண்டாகுமோ அத்தனையும் நேரும் என்கிறது சாஸ்திரம். மனிதனுக்கே இப்படி என்றால், கடவுள் தன் நிலையில் இருந்து இறங்கி பிச்சை ஏற்க வந்தது எதற்காக? கடவுள் என்றும் பாராமல், தன்னை நம்பி வந்த தேவர்களைக் காப்பதற்காக! பக்தனைக் காக்க, பகவான் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி வருவான் என்பது இதிலுள்ள தாத்பர்யம்.

No comments:

Post a Comment