Sunday, 31 December 2017

கணபதிக்கு இல்லை கட்டுப்பாடு


சிவன், அம்பிகை வழிபாட்டில் ஆசாரம், நியமம் என கட்டுப்பாடு பல உண்டு. அதைச் சரிவர கடைபிடிப்பது அவசியம். சிவனுக்கும், நந்திக்கும் குறுக்கே போகக் கூடாது. சிவ வழிபாட்டில் "இங்கே தான் நிக்கணும்! இப்படி தான் நமஸ்காரம் செய்யணும்! இன்ன பூ தான் விசேஷம்' என்றெல்லாம் நியதி பல உண்டு. "சிவசொத்து குலநாசம்' என்ற பழமொழியைக் கேட்டாலே சிலருக்கு அடி வயிற்றில் புளி கரைத்தது போலாகி விடும். அம்பிகைக்குரிய ஸ்ரீசக்ர பூஜையில் கொஞ்சம் தவறு நேர்ந்து விட்டாலும் கூட, கெடுதல் உண்டாகி விடும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விநாயகர் வழிபாட்டில் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. பக்தரை எதிர்பார்த்து வீதியெங்கும் வீற்றிருப்பவர் அவர். எளிய அருகம்புல், எருக்கம்பூவைச் சாத்தி வழிபட்டால் கூட போதும். பரம சந்தோஷத்துடன் அருளை வாரி வழங்கி விடுவார்.

No comments:

Post a Comment