Friday, 29 December 2017

குழந்தை இல்லையா ஜெயந்தி விரதம் இருங்க


திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை இல்லாதவர்கள், கிருஷ்ண ஜெயந்திஅன்று இந்த விரதம் மேற்கொள்வது சிறப்பு. தம்பதியர் காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். கிருஷ்ணர் பாதத்தை வீடு முழுவதும் மாக்கோலமாக வரைந்து, பூஜைஅறையில் விளக்கேற்ற வேண்டும். கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரிக்கும் பாகவதம் என்ற நூலின், பத்தாவது அத்தியாயத்தை படிக்க வேண்டும். 

நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களையும் பாடலாம். கண்ணனுக்குப் படைத்த நைவேத்யத்தை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இரவில் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். இதன் மூலம் விரைவில் வீட்டில் மழலைக் குரல் கேட்கும் என்பர். பிறக்கும் குழந்தைக்கு கண்ணன், ராதா என பெயரிடுவதாகவும் நேர்ந்து கொள்வர்.

No comments:

Post a Comment