
சிவபெருமான் கழுத்து, கை, கால், தோள் என மேனியெங்கும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பார். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய ஐம்பொறிகளும் பாம்பு போல விஷத்தன்மை கொண்டவை. ஆனால், மனதை வசப்படுத்தி விட்டால், இவை ஐந்தும் ஆபரணமாக மாறிவிடும் என்பதை இதன் மூலம் சிவன் உணர்த்துகிறார். லிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் குடைபிடித்தது போல அலங்காரம் செய்வதற்கு "நாகாபரணக்காட்சி' என்று பெயர். இக்காட்சியை கண்டால், மனம் நம் கட்டுக்குள் இருக்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment