விரதநாளில் சாப்பிடாமல் இருப்பதால் சோர்வு உண்டாகும் எனக் கருதும் சிலர், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது அல்லது தாம்பூலம் (வெற்றிலை) போடுவதுமாக இருப்பர்.
""அஸக்ருத் ஜல பாநாச்ச ஸக்ருத் தாம்பூல சர்வணாத்
உபவாஸ: ப்ரணஸ்யேத திவா ஸ்வாபாச் ச மைது நாத்''
என்கிறது வியாசர் எழுதிய ஸ்லோகம்.
"விரத நாளில் அடிக்கடி தண்ணீர் குடிப்பதும், வெற்றிலை பாக்கு போடுவதும், பகலில் உறங்குவதும் போன்ற செயல்களைச் செய்வதால் விரதபலன் நீங்கிவிடும்' என்பது இதன் பொருள். இது ஆண்களுக்கு தான். பெண்கள் விரதநாளில் தாம்பூலம் தரித்தல், மை இடுதல், அலங்காரம் செய்து கொள்ளல் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என ஹேமாத்ரி ஸ்லோகம் கூறுகிறது.
No comments:
Post a Comment