Tuesday 26 December 2017

பெருமாள் விரும்பும் பூலங்கி டிரஸ்


திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு, வியாழன் அன்று மட்டும் "பூலங்கி சேவை' நடக்கும். இந்நாளில், மூலவருக்கு அந்தரீயம் என்னும் கீழாடையும், உத்தரீயம் என்னும் மேலாடையும் அணிவிப்பர். திருமேனி முழுவதும் மலரால் அலங்கரிப்பர். "பூக்களால் ஆன ஆடை' என்பதே பூலங்கி. மறுநாள், வெள்ளியன்று மூலவர் வெங்கடேசருக்கு திருமஞ்சனம் என்னும் அபிஷேகம் நடக்கும். அன்று சுவாமிக்கு பட்டு உடுத்தி, சகல ஆபரணங்களும் அணிவிக்கப்படும். வேதமந்திரம் முழங்க ஆரத்தி காட்டப்படும். இந்த வைபவத்தை நடத்த விஜயநகர மன்னர், கிருஷ்ண தேவராயர் 1000 வராகன் பணம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment