Friday 22 December 2017

தர்ப்பணம் செய்யுங்க! சனியை விரட்டுங்க!


மனிதவாழ்வில் ஆயுள், தொழில் இரண்டையும் நிர்மாணிக்கும் கிரகம் சனீஸ்வரர். இதனால் இவருக்கு ஆயுள்காரகர், ஜீவனகாரகர் என்று பெயர்கள் உண்டு. இவர் சூரியனுக்கும், சாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தார். எமனும், புனிதநதியான யமுனை இருவரும் உடன்பிறந்தவர்கள். தொட்டிலில் குழந்தையாகக் கிடந்தபோதே, தன் இரு கைகளைக் குவித்து சிவனை வணங்கியதால், "சிவபிரியன்' என்று பெயர் பெற்றார். காசியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, பூஜை செய்ததால் நவக்கிரகங்களில் ஒருவராகும் பாக்கியம் பெற்றார். முற்பிறவியில் நாம் செய்த பாவங்களுக்குத் தண்டனை அளித்து, அதன் மூலம் பாவநிவர்த்தி அளிக்கிறார். பிதுர்பூஜை செய்பவர்களை சனீஸ்வரர் துன்புறுத்துவதில்லை என நாரதர் கூறியுள்ளார். முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது, முன்னோர் வடிவமாகக் கருதப்படும் காகத்திற்கு அன்னமிடுவது, உடல்குறைபாடு உள்ளவர்களுக்கு உதவி செய்வது போன்றவற்றால் சனியின் கெடுபலன் நீங்கி நன்மை உண்டாகும்.

No comments:

Post a Comment