2017-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில், ஏழரைச் சனியின் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க எளியப் பரிகாரங்கள்
• பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியைப் போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி சென்றால், நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதைச் செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காகச் சேமித்து வைத்துக் கொள்ளும். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரகநிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே, நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாகப் போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்தப் பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்தப் பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
• ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மைச் சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்னைகளை உருவாக்கி விடும்.
• தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
• சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.
• கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
• வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமைதோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
• சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
• சனிக்கிழமைதோறும் நல்லெண்ணைய் குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
• விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
• அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
• ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
• தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
• அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
• கோமாதா பூஜை செய்யலாம்.
No comments:
Post a Comment