சந்தியா என்றால் "சேர்க்கை' அதாவது "சந்திக்கும் நேரம்' என்று பொருள். பகலும், இரவும் சந்திக்கும் மாலையிலும், இரவும், பகலும் சந்திக்கும் காலையிலும் வரும் இரண்டு நாழிகையை (48 நிமிடம்) சந்தியாகாலம் என்பர். சூரிய உதயம், மறைவுக்கு முன்வரும் 36 நிமிடமும், சூரிய உதயம், மறைவுக்குப் பின்வரும் 12 நிமிடமும் இதில் அடங்கும். இந்த சமயத்தில் வாசல் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆண்கள் சந்தியாவந்தனம், பூஜையில் ஈடுபட வேண்டும். லட்சுமி வீட்டுக்கு வரும் இந்த நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஜெபிப்பது சிறப்பு. இந்த சமயத்தில் சாப்பிடுவதோ, தூங்குவதோ, வீண் பேச்சு பேசுவதோ கூடாது என்கிறது சாஸ்திரம். குறிப்பாக "டிவி'யில் வரும் அழுகைத் தொடர்களைப் பார்க்காமல் "ஆப்' செய்து விட வேண்டும். இன்று முதலாவது "சந்தியா' நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துங்களேன்!
Saturday, 23 December 2017
அழுகையை ஆப் பண்ணுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment