Friday, 29 December 2017

இடது கை எதற்கு ?


இடது கை என்றாலே வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறோம். ஆனால், எதையும் ஆண்டவன் நன்மைக்கே கொடுக்கிறான். தினமும் வீட்டில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை ஸ்தோத்திரம் சொல்லி வழி படுகிறோம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி, சுவாமியின் திருவடியில் தூவ வேண்டும். இதற்கு "புஷ்பாஞ்சலி' என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால் தான் செய்ய வேண்டும் என்றாலும், புஷ்பாஞ்சலியின்போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வது தவறில்லை என்கிறது சாஸ்திரம்.

No comments:

Post a Comment