Monday 25 December 2017

"உ" போட்டு எழுத ஆரம்பிப்பது ஏன் ?


பிரணவ மந்திரமான "ஓம்' என்பது அ, உ, ம என்னும் மூன்று எழுத்துக்களின் கூட்டாகும். "அ' என்பது படைத்தலையும், "உ" என்பது காத்தலையும், "ம" என்பது அழித்தலையும் குறிக்கும். இதனை "அகார, உகார, மகார சேர்க்கை' என்று குறிப்பிடுவர். இந்த மூன்றிற்கும் இதயமாக நடுவிலுள்ள "உ' என்பதே பிள்ளையார் சுழியாக உள்ளது. இதயமே மனிதனைக் காக்கிறது. இதயம் நின்று போனால் ஜீவன் போய் விடும். அதுபோல், "தன்னை நம்பி வந்தவரை காப்பது தான் என் கடமை' என விநாயகர் காத்தல் எழுத்தான "உ'வைத் தனக்குரியதாக கொண்டிருக்கிறார். அதனால் தான், எதை எழுத ஆரம்பித்தாலும், "உ" என்ற பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம். அம்பிகைக்குரிய "தேவி பிரணவம்' எனப்படும் "உமா" என்ற மந்திரத்திலும் "உ" என்பது முதல் எழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment