கடவுளின் தனித்தன்மையைக் குறிப்பிடும் தெய்வீக காட்சியே விஸ்வரூபம். பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் அடக்கிய சர்வ வியாபக நிலையே விஸ்வரூபம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது இதன் பொருள்.
பகவத்கீதையின் 11-வது அத்தியாயத்தில் கிருஷ்ணர் விஸ்வரூபத்தின் சிறப்பை, அர்ஜூனனுக்கு காண்பிக்கும் பகுதி இடம் பெற்றுள்ளது. தினமும் காலையில் கோயில் நடை திறந்ததும் பெருமாளைத் தரிசிப்பதை "விஸ்வரூப தரிசனம்" என்று குறிப்பிடுவர். விஸ்வரூபத்தைத் தரிசிப்பவர்கள் பெருமாளின் பூரண அருளைப் பெறுவர்.
No comments:
Post a Comment