தை, ஆடி அமாவாசைகளைப் போல, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும், தேய்பிறை அஷ்டமி, நவமி திதிகளும் தர்ப்பணம் கொடுக்க மிக ஏற்ற திதிகள். தேய்பிறை அஷ்டமியை அஷ்டகா என்றும், நவமியை அன்வஷ்டகா என்றும் சொல்வர். "உன் வம்சம் வாரிசு இல்லாமல் போகட்டும்,'' என்ற சாபத்தை நம் முன்னோரோ அல்லது நாமோ பெற்றிருக்கக் கூடும். இவ்வாறான கொடிய சாபம், இந்த நாட்களில் தர்ப்பணம் செய்வதால் நீங்கும்.
அஷ்டகா தர்ப்பணம் கொடுக்கும் நாளில், அன்னதானம் செய்ய வேண்டும். அன்று வீட்டில், சமையலுக்கு பயன்படும் உரல், உலக்கை, அம்மி, ஆட்டுக்கல் ஆகியவை,"இன்று அஷ்டகா சிரார்த்த சமையல் செய்வதற்காக, "கலகல, கிலகில' என சப்தமிடும் விதத்தில் என்னை அரைக்கச் செய்து சந்தோஷப்படுத்தினார்கள். எனவே இந்த வீட்டில், விரைவில் நல்ல குழந்தைகள், செல்வ வளம் உண்டாகட்டும்,'' என்று தேவதைகளிடம் வேண்டிக் கொள்ளும்.
No comments:
Post a Comment