
நடராஜர் நடனமாடும் போது, அவர் கையிலுள்ள உடுக்கை இடைவிடாது ஒலிக்கும். சப்த ஸ்வரம் எனப்படும் ஏழு ஸ்வரங்களையும் உடுக்கையில் மிகச் சரியாக எழுப்ப முடியும். இசையுடன் நடனமாடும் இவர், அதுவரை தோன்றி மறைந்த பிரம்மாக்களின் 32 தலைகளை மாலையாகத் தொடுத்து அணிந்திருந்தார். ஒருமுறை, வேகமாக நடனமாடும் போது, அவர் தலையில் சூடியிருந்த சந்திரனிடமிருந்து, அமிர்ததாரை வழிந்தோடி, பிரம்ம தலைகள் மீது பட்டன. அமிர்தம் குடித்தால் இறந்தவை உயிர் பெறும். இதையடுத்து, 32 பிரம்ம தலைகளும் ஆனந்தமாக வாயசைத்துப் பாடத் தொடங்கின. ஆட்டம், பாட்டம் இருக்குமிடத்தில் ஆனந்தம் வந்து விடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
No comments:
Post a Comment