
மனிதர்களாகிய நம்மைப் பார்த்து கடவுள் சிரிப்பதாக ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவார். இரண்டு சந்தர்ப்பங்களில் இப்படி அவர் நம்மைப் பார்த்துச் சிரிப்பதுண்டு. ஒரு நோயாளியைப் பார்த்து, "நான் பிழைக்க வைத்து விடுகிறேன்'' என்று ஒரு டாக்டர் சொல்லும்போதும், சகோதரர்கள் தங்கள் சொத்தைப் பிரிக்கும்போது தங்களுக்குள் கலகம் செய்து கொள்ளும்போதும் அவர் சிரிப்பாராம். தன்னுடைய மருத்துவத்தால் ஒரு நோயாளியை பிழைக்க வைக்க முடியும் என்று டாக்டர் நினைப்பார் என்றால், அவர் தன்னை, ஒரு செயலின் பலனைத் தீர்மானிப்பவராக நினைத்துக் கொள்கிறார். உண்மையில், அவர் செய்வது முயற்சி மட்டுமே. பலனைத் தீர்மானிக்க அவர் யார்? கடவுளே எல்லாவற்றிற்கும் அதிகாரி.இந்த உலகில் யாருக்கும் எதுவும் சொந்தமில்லை. நாம் உலகைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கும் பயணிகள் மட்டுமே.
No comments:
Post a Comment