Friday 29 December 2017

கடவுள் உங்கள் பக்கம் வரவேண்டுமா ?


முதல் யுகமான கிருதயுகத்தில் உலகில் தர்மம் மட்டும் தழைத்திருந்தது. அந்த யுகத்தில் எதிரெதிர் குணம் படைத்த புலியும் ஆடும் கூட ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தியதாகச் சொல்வர். இப்போது கலியுகத்தில் கால்பங்கு கூட தர்மம் இல்லாமல் போனது. அதர்மமே கலியுக தர்மமாகி விட்டது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றைய உலகமும் இருக்கிறது. அன்புநெறியைப் பின்பற்ற வேண்டிய மனிதர்கள் கூட பகைவர்களாக மாறி விட்டனர். "தர்மம் சர' என்று வேதம் மனிதனுக்கு கட்டளை இடுகிறது. "தர்மத்தைப் பின்பற்று' என்பது இதன் பொருள். 

தர்மத்தை பின்பற்றினால் உலகில் வாழ முடியாது என்று பெரும்பான்மையான மக்கள் தற்காலத்தில் கருத ஆரம்பித்து விட்டனர். ஆனால், நூறு பேராக இருந்த கவுரவர்களுக்கு கண்ணன் உதவி செய்யவில்லை. சிறுபான்மை பாண்டவர்களுக்கு தான் உடனிருந்து துணை புரிந்தார் என்கிறது மகாபாரதம். தர்மத்தின் வழியில் நடப்பவரைக் காப்பதே என் கடன் என்கிறார் கீதைநாயகன் கிருஷ்ணர். தர்மத்தின் பக்கம் நின்றால், கடவுள் உங்கள் பக்கம் வந்து விடுவார்.

No comments:

Post a Comment