Friday, 29 December 2017

அக்கா தம்பி சந்நதி


அட்டவீரட்டத் தலங்களில் (சிவன் வீரச்செயல்கள் நிகழ்த்திய இடங்கள்) ஒன்று, கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகை. நாவுக்கரசரின் காடிய சூலைநோயினைப் போக்கிய வீரட்டானேஸ்வரர் இங்குள்ள கோயிலில் உள்ளார். இக்கோயிலில் நாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதியாருக்கும் சந்நிதி உண்டு. தேவாரத்தில், தான் பாடிய முதல் பாடலில் இத்தல சிவனைப் பற்றியே நாவுக்கரசர் பாடியிருக்கிறார். வீரட்டானேஸ்வரரை வழிபட்டே திலகவதியார், சமணமதத்தை தழுவிய தன் தம்பியை சைவ சமயத்திற்கு மாற்றினார்.

No comments:

Post a Comment