Thursday 28 December 2017

குருவும் தெய்வமும் ஒன்றே


கிருஷ்ணர் மீது 25 ஆயிரம் பாடல்கள் இயற்றிய சூர்தாசர், முற்பிறவியில் யது வம்சத்தில் அக்ரூரர் என்னும் பெயரில் பிறந்தார். கம்சனிடம் மந்திரியாக இருந்த அவர், கிருஷ்ணர் மீது அந்தரங்க பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். சூர்தாசர் தன்னுடைய பாடல்களில் தன்னுடைய குருநாதரான வல்லபாச்சாரியாரின் பெயரை எந்தப்பாடலிலும் குறிப்பிட்டுப் பாடவில்லை. இதையறிந்த பக்தர் ஒருவர் சூர்தாசரிடம், "இத்தனை ஆயிரம் பாடல் எழுதிய நீங்கள், நன்றியுடன் ஒரு இடத்தில் கூட குருவின் பெயரைக் குறிப்பிடவில்லையே?'' எனக் கேட்டனர். அதற்கு, "குருநாதரான வல்லபாச்சாரியாரும், கிருஷ்ணரும், வேறு வேறல்ல. இருவரும் எனக்கு ஒருவரே'' என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment