காசியில் வீற்றிருக்கும் விஸ்வநாதராகிய சிவன், "பழம்நீ'' என்று அழைத்ததால், முருகன் குடியிருக்கும் தலம் "பழம்நீ" (பழநி) என்றானது. அருணகிரிநாதரும், "காசியின் மீறிய பழனாபுரி பெருமாளே!' என்று காசியை விட பழநி சிறந்தது என்று திருப்புகழில் பாடியுள்ளார். ஞானமே வடிவாக பழநி தண்டாயுதபாணி இருப்பதால், "ஞானபண்டிதன்' என போற்றப்படுகிறார். அவரது கையில், ஞானமே தண்டாயுதமாக இருக்கிறது. தன்னை நாடிவருவோருக்கு செல்வ வாழ்வு தர வேண்டும் என்பதற்காக, அவர் எளிமை மிக்க ஆண்டியாக இருக்கிறார். குழந்தைக்குப் பாலகனாகவும், இளைஞருக்குக் குமரனாகவும், கலைஞர்களுக்கு ஆறுமுகராகவும், வீரர்களுக்கு சேனாதிபதியாகவும், மந்திர உபதேசம் பெற வருவோருக்கு ஞான பண்டிதனாகவும், தம்பதியருக்கு வள்ளிமணாளனாகவும், பற்றற்ற ஞானியருக்கு ஆண்டியாகவும் அருளை வாரி வழங்குகிறார்.
Saturday, 23 December 2017
அகிலம் போற்றும் "ஆண்டி''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment