துளசிமாலையை அணிந்து கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம் ஒன்றுண்டு.
"துளசீ காஷ்ட ஸம்பூதே மாலே க்ருஷ்ண ஜந ப்ரியே!
பிபர்மி த்வாமஹம் கண்டே குருமாம் க்ருஷ்ண வல்லபம்!!
இதைச் சொல்ல முடியாதவர்கள் கீழுள்ள பொருளைச் சொல்லலாம்.
"துளசி கட்டையால் செய்யப்பட்ட துளசி மாலையே! கிருஷ்ணருக்கும், கிருஷ்ண பக்தர்களுக்கும் பிரியமானவளே! உன்னை நான் கழுத்தில் அணிந்து கொள்கிறேன். என்னையும் கிருஷ்ணருக்கு பிரியமானவராகச் செய்வாயாக''. துளசி மாலையை கிருஷ்ணருக்கு சமர்ப்பித்த பின்னர் அணிந்து கொள்வது அவசியம். மனத்தூய்மையோடு துளசிமாலை அணிந்து செய்யும் ஜபத்திற்கு பன் மடங்கு பலன் உண்டு. இதனால், பாவங்கள் நம்மைத் தீண்டாமல் விலகி விடும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment