அன்றாடம் வீட்டில் பூஜை செய்யும் போது "பலி' மந்திரம் சொல்லி பூஜையை முடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். திருமாலை வழிபடுபவர்கள் சுவாமிக்கு நைவேத்யம் செய்த அன்னத்தை சிறிது கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
"பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன:!
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா:!''
இதை சொல்ல முடியாதவர்கள், "மகாபலி, விபீஷணன், பீஷ்மர், கபிலர், நாரதர், அர்ஜுனன் முதலான விஷ்ணு பக்தர்கள் அனைவரும் இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்வார்களாக' என்று சொல்ல வேண்டும்.
சிவபூஜை செய்பவர்கள்,
"பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய
மஹாதேவ ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹணந்து ஸாம்பவா:''
என்று சொல்ல வேண்டும். முடியாதவர்கள் "பாணாசுரன், ராவணன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், பிருங்கி மகரிஷி முதலான சிவபக்தர்கள் இந்த அன்னத்தை விருப்பத்துடன் ஏற்க வேண்டும்' என சொல்ல வேண்டும். இந்த அன்னத்தை காகத்திற்கு இடுவது அவசியம்.
No comments:
Post a Comment