ஆணோ, பெண்ணோ... சமையல் கலையைக் கற்றுக்கொண்டு, வீட்டில் யார் சமைக்கிறார்களோ, அவர்களுக்கு ஆயுள் விருத்தியாகும். காரணம் தெரியுமா! சமையல் என்பது தவம் செய்வது மாதிரி.
ஞானிகளும், முனிவர்களும் அந்தக் காலத்தில் கடவுளை நினைத்து தவம் செய்தார்கள். எப்படியோ, கடவுளை நேரிலேயே பார்த்து விட வேண்டு மென்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. தவத்தை வடமொழியில் "தபஸ்' என்பர். இதற்கு "பக்குவப்படுத்துதல்' என்று பொருள். பக்குவமற்ற பச்சைக் காய்கறிகளை, பக்குவமாய் சமைத்தால், ருசியான கூட்டாக மாறுகிறது. சமைக்கும் போது, மனம் அங்கும் இங்கும் ஓடாது.
ஏனெனில், உப்பு போட்டோமா, புளி கரைசலை ஊற்றினோமா என்ற சந்தேகமெல்லாம் வந்து விடக்கூடாது. மனம் ஒரு நிலைப்பட்டு இருந்தால் தான், சமையல் ருசியாக இருக்கும். மனம் ஒரு நிலைப்படுவதற்கு பெயரே தியானம். தியானம் செய்தால் ஆயுள் கூடும். இதனால் தான், பெண்கள் ஆண்களை விட அதிக வயது வாழ்கிறார்கள். சமையலில் அரிசி, காய்களைப் பக்குவப்படுத்துவது போல, மனதைப் பக்குவப்படுத்தி, ஒரு நிலைக்குள் கொண்டு வந்தால், தெய்வமே கண்ணுக்கு தெரிகிறது. இதனால் தான் சமையலை "தவம்' என்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில், சமையல் தொழில் செய்பவர்களை "தவசுப்பிள்ளை' என்று குறிப்பிடுவர். "தவசு' என்றால் "சமையல்'.
No comments:
Post a Comment