Friday, 22 December 2017

ஒரு குழந்தைக்கு ஆயிரம் பெயர் வைக்கலாம்


மகாவிஷ்ணுவிற்குரிய ஆயிரம் பெயர்களைச் சொல்வது தான் விஷ்ணு சகஸ்ரநாமம். விஷ்ணு என்றால் "எங்கும் நிறைந்தவர்' என்று பொருள். விஷ்ணுவின் பெயர்களையும், குணங்களையும் யாராலும் அளவிட முடியாது. இருந்தாலும், வியாசர் குறைந்தபட்சம் ஆயிரத்தையாவது மந்திரமாக அன்றாடம் சொல்ல வேண்டும் என்பதற்காக இதை வழங்கியுள்ளார். மகாபாரதத்தில் அனுசாஸனிக பர்வத்தில், தர்மபுத்திரருக்கு பீஷ்மர் உபதேசித்த இந்த ஸ்தோத்திரம் 150 ஸ்லோகங்களில் அமைந்துள்ளது. ஒரு பெயர் வைக்க ஆசைப்படலாம். ஒரே குழந்தைக்கு ஓராயிரம் பெயர் வைக்க முடியுமா? வைக்கலாம். அந்தப் பெயர் தான் "சகஸ்ரநாமம்'. அதனால் தான் அந்தக் காலத்தில் "சகஸ்ரநாமம்' என்று பெயரிடும் வழக்கம் இருந்தது.

No comments:

Post a Comment