Saturday 30 December 2017

மணி அடிக்க வேண்டிய நேரம்


பூஜைப்பொருளில் ஒன்றான மணியை இஷ்டம் போல நினைத்த நேரமெல்லாம் அடிக்கக் கூடாது. அதற்குரிய நேரத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்கிறது பரசுராம கல்ப சூத்திரம்.

"ஸ்நாநே தூபே ததா தீபே நைவேத்யே பூஷணே ததா
கண்டா நாதம் ப்ரகுர்வீத ததா நீராஜநேபிச'' என்கிறது அதற்கான ஸ்லோகம்.

அபிஷேகத்தின் போதும், சாம்பிராணி காட்டும் போதும், தீபாராதனை வேளையிலும், நைவேத்யம் செய்யும்போதும், ஆபரணம் அணிவித்து அலங்கரிக்கும் போதும், நீராஞ்ஜனம் என்னும் கற்பூர ஆரத்தியின் போதும் மணியோசை எழுப்ப வேண்டும். வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டும் போது மணியடிப்பது நல்லது.

No comments:

Post a Comment