Saturday 23 December 2017

மறந்தால் மகிழ்ச்சி


பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவதே தியாகம். யாகம்,ஹோமம் முதலிய எந்த செயலைச் செய்தாலும், அதை முடிக்கும் போது, ""நான் தான் இந்த செயலைச் செய்தேன். இதன் பயன் முழுவதும் எனக்கே வர வேண்டும்'' என்று எண்ணக் கூடாது என வேதம் வலியுறுத்துகிறது. தியாக மனப்பான்மையுடன்,"ந மம' அதாவது "பலன் எனக்கில்லை' என்று உலக நன்மைக்காக அர்ப்பணித்து விட வேண்டும். தான தர்மம் செய்யும்போதும், ""நான் தான் கொடுத்தேன்'' என்ற எண்ணத்தையும் சேர்த்து தியாகம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. காஞ்சிப்பெரியவர் ஒருபடிமேலே போய், "தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தைக் கூட மறந்து விடுவதே மகிழ்ச்சியானது' என்கிறார்.

No comments:

Post a Comment