மாக்கோலம் இடுதல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் பழமையானவை. மாக்கோலம் இடும் வழிபாடு அரிதாகி விட்டாலும், மாவிளக்கு வழிபாடு இன்றும் தொடர்கிறது. நோய் தீர்வதற்காக, மாரி, காளி போன்ற பெண் தெய்வங்களுக்கு இதை நேர்த்திக் கடனாகச் செய்வர். ஆறு, குளங்கள் உள்ள ஊரில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலன் தரும். இங்குள்ள ஆறு, குளத்தில் நீராடிய பின், மனத்தூய்மையுடன் ஊற வைத்த அரிசியை இடித்து மாவாக்க வேண்டும். அதில் இளநீரும், வெல்லமும் சேர்த்துப் பிசைந்து இரண்டு உருண்டையாகப் பிடிக்க வேண்டும். அம்மன் சந்நிதி முன் வாழை இலை விரித்து, மாவுருண்டையில் குங்குமம் இட்டு விளக்கேற்ற வேண்டும். "அம்பிகையே! எங்கள் நோய்நொடியைப் போக்கி, ஆரோக்கியத்தை தந்தருள வேண்டும். உன் அருளால் குடும்பத்தில் அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டும்'' என வேண்டிக் கொள்ள வேண்டும்.
Friday, 22 December 2017
நோய் தீர்க்கும் மாவிளக்கு வழிபாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment