பிதுர் தர்ப்பணத்தை எந்த காரணத்திற்காகவும் செய்யாமல் இருப்பது கூடாது. இருந்தாலும், திருமணம் போன்ற சுபவிஷயங்கள் நடந்திருக்கும் குடும்பங்களில், குறிப்பிட்ட காலம் தர்ப்பணத்தில் எள்ளைச் சேர்த்துக் கொள்ள விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
"விவாஹே சோபநயனே சௌளே ஸதி யதா க்ரமம்
வர்ஷமர்த்தம் ததர்தம் ச நைத்யகே தில தர்ப்பணம்''
என்கிறது ஸ்லோகம். திருமணம் முடிந்து ஒரு வருட காலமும், உபநயனத்திற்கு ஆறு மாதமும் எள்ளினால் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக அட்சதையும், தர்ப்பைக்குப் பதிலாக அருகம்புல்லும் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment