Monday 18 December 2017

நட்சத்திர சின்னம்


மாமன்னர் சாலமன் கிரகநிலை பற்றி தெளிவாக அறிந்திருந்தார். தனக்கு இதுபற்றிய அறிவை வழங்கியதற்காக, கடவுளுக்கு நன்றி தெரிவித்த தகவல், ஹிப்ரு மொழி நூல்களில் உள்ளது. "எல்லாம் வல்ல கடவுளே! உமக்கு எமது மனமார்ந்த நன்றிகள். தாங்கள் எமக்கு கிரகங்களைப் பற்றிய ரகசியங்களையும், அதனால் விளையும் பருவகால மாற்றங்களையும் தெரிய வைத்தீர்கள். இதன்மூலமாக, மனிதர்களின் மனம், எண்ண ஓட்டம், இயல்பு ஆகியவற்றை அறியும் தெளிவைத் தந்தீர்கள். கிரகங்கள் குறித்த நுண் அறிவே, எமது பேரறிவுக்கு அடிப்படைக் காரணம்,'' என்பது அவரது அறிக்கை.

சாலமனின் ராஜமுத்திரையாக திகழ்ந்தது ஏழுமுனைகளைக் கொண்ட நட்சத்திர சின்னம். இந்த சின்னம் கிரகங்களில் அடிப்படையில் ஆனது மட்டுமல்ல! வாழ்க்கை தத்துவத்தையும் உணர்த்துகிறது. இதுபற்றி மாமேதை ஷீரோ கூறியிருப்பதாவது.

"படைப்புக்கு காரணமாக விளங்கும் சூரியனிடமிருந்து உயிரின் வாழ்க்கை தொடங்குகிறது. மனதை ஆளும் சந்திரன் மூலம் தொடர்கிறது. செவ்வாய் தரும் பலம், புதன் தரும் அறிவு மூலம், குரு தரும் செல்வம், தர்மசிந்தனை அமைகிறது. வாழ வழி செய்யும் சுக்கிரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு, முடிவை ;நிர்ணயிக்கும் சனியை வந்தடைகிறது. மீண்டும் இந்த உயிர் சூரியன் மூலம் பிறந்து இதே வழியில் சுற்றுகிறது. காலம் காலமாக இந்த சுழற்சி தொடர்கிறது,'' என்கிறார் ஷீரோ.

No comments:

Post a Comment