Monday 4 December 2017

கேதாரேஸ்வரர் கோயில் பிறந்த கதை


பேசும் திறன் இல்லாமல் பிறந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பாடும் திறம் பெற்றவர் குமரகுருபரர். இவர் காசி யாத்திரை சென்றார். அங்கே பாதுஷாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவரிடம், சைவ மடம் கட்டுவதற்கு இடம் வழங்கும்படி வேண்டினார். அமைச்சரிடம் ஆலோசித்த பாதுஷா, "ஏதாவது ஒரு கருடன் வரட்டும். அது பறக்கும் சுற்றளவிற்கு நிலம் வழங்குகிறேன்,' என உறுதியளித்தார். இதன்பின், கருடன் பெரிய அளவுக்கு வட்டமிட்டால், நிலத்தை அதிகமாக கொடுக்க வேண்டி வருமே என்று யோசித்தார். இதையறிந்த அமைச்சர் பாதுஷாவிடம், "காசியில் கருடன் இல்லை. பிணம் தின்னும் கழுகு தான் பறக்கும். அதனால் இவருக்கு நிலம் கொடுக்க வேண்டிய அவசியமே வராது,'' என்றார். ஆனால்,காசி விஸ்வநாதரின் திருவிளையாடலால், ஒரு கருடன் வானில் வட்டமிட்டது. அது சுற்றிய அளவுக்கு நிலம் வழங்க ஆணையிட்டார் பாதுஷா. அந்த இடத்தில் கேதாரேஸ்வரர் (சிவன்) கோயில் கட்டினார் குமரகுருபரர். ஒரு மடமும் இங்கிருக்கிறது.

No comments:

Post a Comment