Wednesday 6 December 2017

ஜலபரிஷேஸனம் என்றால் என்ன ?

Image result for பிராமணர்

பிராமணர்கள் சாப்பிடும் முன்,"ஜலபரிஷேஸனம்' என்ற முறையில் உள்ளங்கையில் சிறிது தண்ணீர் விட்டு உறிஞ்சுவதைப் பார்த்திருப்பீர்கள். வலக்கை ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் சேர்த்து வைத்து, மற்ற விரல்களை நீட்டி, உள்ளங்கையில் சிறிது தண்ணீர் ஊற்றி, உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்து, மூன்று முறை உறிஞ்சிக் குடிப்பதே ஜலபரிஷேஸனம். 

இதற்கு காரணம் தெரியுமா!

சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பொது விதி. இவ்வாறு செய்தால் ஜீரணம் கெட்டு விடும். பற்களால் உணவைச் அரைத்து சாப்பிடும்போது, சுரக்கிற உமிழ்நீரே, உணவைக் கரைக்க போதுமானது. சாப்பிடும் முன், கை கால் கழுவி, வாய் கொப்பளிப்பதும் இதனால் தான். அதிலும் ஓரளவு தண்ணீர் வாயில் ஒட்டிக்கொள்ளும் சரி.. விக்கல் வந்து விட்டது, உணவு காரமாக இருக்கிறது...அப்போது என்ன செய்ய என்ற கேள்வி எழும். இதற்கு தீர்வு, உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். விக்கல் வர காரணம் என்ன தெரியுமா?

சாப்பிடும் போது வேலை, தொழில், வியாபாரம், இன்ன பிற விஷயங்களைச் சிந்திப்பது தான். எனவே, சாப்பிடும் சமயத்தில் சாப்பாட்டைப் பற்றிய சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். இதனால் தான் சாப்பிடும் முன், நாக்கு நனையுமளவு மிகக்குறைந்த அளவு தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். 

ஜலபரிஷேஸனம் என்ற ஆன்மிகச் சடங்கு செய்பவர்களை கேலி செய்பவர்கள், இனியாவது, இதிலுள்ள அறிவியல் காரணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment