Monday 18 December 2017

நலம் தரும் செவ்வாய்


விநாயக பக்தரான பரத்வாஜ முனிவர் நர்மதை நதியில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது வான்வழியில் சென்ற தேவமங்கையைக் கண்டு காதல் கொண்டார். அவர்கள் இருவருக்கும் நெருப்பு போல சிவந்த குழந்தை பிறந்தது. அதனால் "அங்காரகன்' எனப் பெயரிட்டனர். அக்குழந்தையை பூமிதேவி எடுத்து வளர்த்ததால் "பூமி குமாரன்' என்றும் பெயர் பெற்றார். 

தந்தையைப் போல, அங்காரகனும் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டார். அவருடைய பக்தியை மெச்சிய விநாயகர், தேவர்களில் ஒருவராகும் பாக்கியத்தையும், நவக்கிரக அந்தஸ்தையும் வழங்கினார். அங்காரகனும், தனக்குரிய செவ்வாய்க்கிழமையில் விரதமிருந்து விநாயகரை வழிபடுவோரின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு அருளும்படி வேண்டிக் கொண்டார். உடல்நிலை சிறப்பாக இருக்க, செவ்வாய்க்கிழமை விநாயக விரதத்தை ஒரு ஆண்டு காலத்திற்கு மேற்கொள்ளலாம். தை அல்லது ஆடியில் செவ்வாய் விரதம் மேற்கொள்வது இன்னும் சிறப்பு.

No comments:

Post a Comment