Tuesday 5 December 2017

இருவரின் இணைப்பில் ராதா


கிருஷ்ண வழிபாட்டில், கிருஷ்ணரை சத்தியபாமா, ருக்மணியோடு வழிபடுவதே முறை. இதற்கு ஆதாரமாக, ""ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ணமாச்ரயே'' என்ற விஷ்ணு சகஸ்ரநாம தியான ஸ்லோகத்தை குறிப்பிடுவர். லட்சுமியின் அம்சமான ருக்மணியையும், பூமிதேவியின் அம்சமான சத்தியபாமாவையும் வழிபடுவதன் மூலம் இம்மை, மறுமை வாழ்வு சிறக்கும். வடஇந்தியாவில் ராதாவை ஜீவாத்மா ஆகவும், கிருஷ்ணரை பரமாத்மா ஆகவும் கருதி வணங்குகின்றனர். பாமா, ருக்மணியின் இணைந்த வடிவமே ராதா. கிருஷ்ணரின் நினைவு மட்டுமே ராதை மனதில் எப்போதும் இருக்கும் என்பதால் ராதாகிருஷ்ணராக வழிபடுவது வட இந்தியாவில் பிரபலமாகி விட்டது.

No comments:

Post a Comment