திருவிழா சமயத்தில் கோயில் கொடி மரத்தை தர்ப்பைப் புல்லால் அலங்கரிப்பர். ஹோமம், யாகம் நடத்தும் போது அந்தணர்கள் தர்ப்பையை அணிந்திருப்பர். தர்ப்பைப் புல்லால் ஆன மாலையை "பவித்ரம்' என்பர். "பவித்ரம்' என்றால் "தூய்மையானது'. அசுர சக்திகள் யாகத்தை அழிக்கும் நோக்கத்துடன் சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால், தர்ப்பை இருக்கும் இடத்தில், தீயசக்தியின் ஆற்றல் காணாமல் போய்விடும். சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சக்ராயுதம், இந்திரனின் வஜ்ராயுதம் போல, யாகம் நடத்துபவர்களுக்கு தர்ப்பை புல்லால் ஆன பவித்ரமே கவசமாகும். தாமரை இலைத் தண்ணீர் போல, பவித்ரம் அணிந்தவரைப் பாவம் தீண்டுவதில்லை என "ப்ரபா' என்னும் மந்திர நூல் கூறுகிறது.
Saturday 2 December 2017
கொடிமரத்தில் தர்ப்பை கட்டுவது ஏன் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment