Tuesday 19 December 2017

கொடியவருக்கும் மன்னிப்பு


மதுராவை ஆண்ட கம்சன், தன் தங்கை தேவகியின் குழந்தைகளை இரக்கமின்றி கொன்று வந்தான். எட்டாவது குழந்தையாக கண்ணன் பிறந்ததும், அவன் ஆயர்பாடிக்கும், ஆயர்பாடியில் பிறந்த மாயாசக்தியான துர்க்கை மதுராவுக்கும் மாறினர். தனக்கு பெண் குழந்தையே பிறந்திருப்பதாக தேவகி சொன்னாலும், கம்சன், குழந்தையின் இருகால்களையும் கைகளால் பற்றியபடி சுவரில் அறையத் துணிந்தான். ஆனால்,மாயாசக்தியோ கண் இமைக்கும் நேரத்திற்குள் அவனை விட்டு மறைந்து, விண்ணில் காட்சியளித்தாள். 

"ஏ கம்சா! உன் ஆணவத்திற்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. உன் தங்கையின் வயிற்றில் எட்டாவது குழந்தையாக பிறக்கும் கண்ணனே உன்னை அழிப்பான்'' என்றாள். கம்சன் குழந்தையின் கழுத்தைப் பிடித்திருந்தால், மாயாசக்தி கம்சனின் உயிரை அப்போதே குடித்திருப்பாள். ஆனால், அவளின் காலையல்லவா கம்சன் பிடித்து விட்டான்! அதனால், போனால் போகட்டும் என்று மாயாசக்தி உயிர்ப்பிச்சை அளித்தாள் என்று விளக்கம் அளிப்பர். அம்பாளின் திருவடிகளைச் சரணடைந்தால் கொடியவர்களுக்கும் மன்னிப்பு கிடைக்கும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.

No comments:

Post a Comment