Wednesday 20 December 2017

கலகக்காரர்தான்! ஆனால் நல்லவர்!


சத்தியம், தர்மத்தை உபதேசித்த ராமாயணம், மகாபாரதத்தை எழுதிய வால்மீகி மற்றும் வியாசருக்கு குரு யார் தெரியுமா? நாரதர் தான். வழிப்பறியில் ஈடுபட்ட ரத்னாகரன் என்பவருக்கு, நாரதர் ராம நாமத்தை உபதேசித்தார். அதைக் கூட சொல்லத்தெரியாத ரத்னாகரன், "மரா' என சொல்ல ஆரம்பித்தார். அதை வேகமாகச் சொல்லும் போது "ராம' என்று சரியாக மாறியது. அந்த நாமத்தின் பலனால், அவர் ராமாயணத்தையே எழுதுமளவு வல்லமை பெற்றார். வால்மீகி என்னும் பெயர் பெற்றார். வேதம், புராணம், பிரம்மசூத்திரம் என அத்தனையையும் எழுதிய பின்னும் அமைதியின்றி தவித்த வியாசருக்கு, பக்தியுணர்வை போதித்து பாகவதத்தை எழுதவும் தூண்டினார். விகடமாகப் பேசும் இவர், தேவர்களிடமும், அசுரர்களிடமும் பழகியவர். அசுரக்குழந்தையான பிரகலாதனுக்கு "நாராயண' மந்திரத்தை கருவில் இருக்கும் போதே உபதேசித்தார். விஷ்ணுவே மூலமுதற்பொருள் என தவத்தில் ஆழ்ந்த துருவன் என்ற சிறுவனுக்கும் குருவாக விளங்கினார். இவர் கலகம் செய்பவர் என்றாலும், அனைவருக்கும் அது நன்மையிலேயே முடிந்தது.

No comments:

Post a Comment