Wednesday 6 December 2017

உறங்கும் நரசிம்மர்


நரசிம்மர் தனித்து யோகநிலையிலும், தாயாரை மடியில் அமர்த்தி லட்சுமி நரசிம்மராகவும் இருப்பது வழக்கம். திருவதிகை சரநாராயணப்பெருமாள் கோயிலில் தெற்கு நோக்கி சயனம் செய்த கோலத்தில் நரசிம்மர் காட்சியளிப்பது வேறெங்கும் இல்லாத சிறப்பாகும். வக்கிராசூரன் என்னும் அசுரனை அழித்த, நரசிம்மர் இங்கு ஓய்வெடுப்பதாக தலபுராணம் கூறுகிறது. சயனத்தில் இருக்கும் இவருடன் தாயாரும் காட்சியளிக்கிறார். "யோக சயன நரசிம்மர்' எனப்படும் இவருக்கு, பிரதோஷ வேளையில் அபிஷேக ஆராதனை நடக்கும். மனஅமைதிக்காக நரசிம்மர் இங்கு சயனகோலத்தில் இருப்பதால், இங்கு தரிசித்தவர்க்கு மன அமைதி உண்டாகும். பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில் திருவதிகை உள்ளது.

No comments:

Post a Comment