Monday 11 December 2017

உப்பில்லாமல் சாப்பிட்டால் மழை கொட்டும்


உணவின் ருசியே உப்பை பொறுத்துத் தான் இருக்கிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். சுவைக்கு ஆதாரமான உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்று சாஸ்திரம் சொல்கிறது. வயதான காலத்தில் உப்பில்லாமல் சாப்பிட்டுக் கொள்ளலாம் என விட்டு விடாமல் இருக்கவே, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை போன்ற விரத நாட்களில் உப்பில்லாமல் சமைக்க வேண்டும் என கட்டுப்பாட்டை உருவாக்கினர். இதனை "அலவண நியமம்' என்று சொல்வார்கள். "லவணம்' என்றால் உப்பு. மழை வேண்டி வருண மந்திர ஜெபிப்பவர்கள், உப்பு சேர்த்த உணவைச் சாப்பிட்டு விட்டு ஜெபித்தால் பலன் கிடைப்பதில்லை. அதுவே அவர்கள் உப்பில்லாமல் (அலவணமாக) சாப்பிட்டு ஜெபித்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment