Monday 11 December 2017

சாப்பாட்டை சிந்தக்கூடாது... ஏன் ?

Image result for சாப்பாடு

தனக்கு தேவையான உணவை தானே சமைத்துக் கொள்வதை "சுயம்பாகம்' என்பர். மற்றவர்கள் சமைக்கும் உணவை விட இது உயர்வானது. ஏனென்றால், சமைப்பவரின் எண்ணங்கள் சமையலைப் பாதிக்கும். சமைக்கும்போது, தெய்வ சம்பந்தமாகவே கடவுளின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே சமைக்க வேண்டும். சாப்பிடும்போது, ""நான் உண்ணும் இந்த உணவைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன்,'' என்று சொல்ல வேண்டும்.""நாம் உண்ணும் அன்னமும் சிவன். அதை ஜீரணிக்கும் அக்னியும் சிவன். அதை சாப்பிடுபவனும் சிவன். அதனால் அடையப்போகும் லட்சியமான கடவுளும் சிவன்,'' என்கிறார் காஞ்சிப்பெரியவர். அதாவது, சாப்பாட்டை தெய்வமாகவே மதிக்க வேண்டும். அதனால் தான் குழந்தைகள் சாப்பிடும் போது, ""சிந்தாமல் சிதறாமல் சாப்பிடு,'' என கற்றுக் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment