Wednesday 6 December 2017

மலர் விசிறி

Image result for ramayanam

அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், பாரதம், பாகவதம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள ராமனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் ரகுவம்சம். காளிதாசர் எழுதிய இந்நூலில், கோசலை கர்ப்பவதியாக இருந்த போது வந்த கனவு பற்றி விவரிக்கப் பட்டுள்ளது. கனவில், கவுஸ்துபமணி அணிந்த மார்புடன் லட்சுமி தோன்றினாள். அவளது கையிலிருந்த தாமரைப்பூ விசிறியாக மாறியது. அதைக் கொண்டு கோசலைக்கு வீசினாள். பெருமை மிக்க கோசலைக்கு மகாவிஷ்ணுவே பிள்ளையாக அவதரிக்க இருப்பதால், அவள் விசிறியதாக கூறுவர்.

No comments:

Post a Comment