
நாரதர் தலைமையில் முனிவர்கள் யாகம் ஒன்றை நடத்தினர். அப்போது மந்திரம் சொல்வதில் குறை உண்டானது. அதனால், அவர் நினைப்பிற்கு மாறாக யாகத்தீயில் பலம் மிக்க ஆட்டுக்கிடா ஒன்று தோன்றியது. ஆட்டினைக் கண்ட தேவர்கள் என்ன நடக்குமோ என்று அஞ்சினர். அந்த சமயத்தில், அங்கு வந்த முருகன், ஆட்டினை அடக்கி தன் வாகனமாக்கி, மூவுலகையும் வலம் வந்தார். இதனால், முருகனுக்குரிய வாகனங்களில் ஆட்டுக்கிடாவும் ஒன்றானது.
No comments:
Post a Comment