Sunday 17 December 2017

பீஷ்மாஷ்டமி


சூரியன் வான மண்டலத்தில் இருவகையான சஞ்சாரங்களைச் செய்கிறார். அதில் சூரியனின் வடதிசைப் பயணத்தை உத்ராயணம் என்றும், தென்திசைப் பயணத்தை தட்சிணாயனம் என்றும் குறிப்பிடுவர். இதில் தை முதல் ஆனி வரையிலான உத்ராயணம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆறு மாதத்தில், மரணம் அடைவோரின் உயிரானது தேவமார்க்கம் என்னும் வெளிச்சமான பாதையில் சென்று மேலுலகத்தை அடைவதாக பகவத்கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். மகாபாரத யுத்தம் நடந்தபோது, பிதாமகர் பீஷ்மர் தட்சிணாயன காலத்தில் தனக்கு இறப்பு உண்டாகக் கூடாது என்று எண்ணி, உத்ராயணம் வரும் வரை அம்புப்படுக்கையில் உயிர் துறக்காமல் காத்திருந்தார். தை மாதத்தில் பீஷ்மர் உயிர் துறந்த நாளை "பீஷ்மாஷ்டமி' என்று குறிப்பிடுவர். இந்த நாளில் அவர் நினைவாக பீஷ்மதர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment