Sunday 10 December 2017

டிக்கட் எடுக்காமலே வைகுண்டம் போகலாம்


திருப்பதி செல்பவர்கள், ஏழுமலையானை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டுமே! டிக்கட் எடுக்க வேண்டுமே! என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை. அவருடைய வலக்கரம் கீழ்நோக்கி திருவடியைக் காட்டியபடி இருக்கும். "சரணடையத்தக்கவன் நான் ஒருவனே' என்பதை உணர்த்தும் இந்த அமைப்பை "வைகுண்ட ஹஸ்தம்' என்பர். "என் திருவடிகளை பற்றிக் கொண்டால், வைகுண்டம் செல்வதற்கு வழிகாட்டுவேன்' என்பதை இந்த அமைப்பு உணர்த்துகிறது. ஏழுமலையானை மனதில் நினைத்து, "ஸ்ரீவேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே' என்ற மந்திரத்தை (ஏழுமலையானே! உன்னை நான் சரணடைகிறேன்) என்று தினமும் ஏழுமுறை மனதாரச் சொன்னாலே போதும். டிக்கட் இல்லாமலே நேராக வைகுண்டம் அழைத்துச் சென்று விடுவார்.

No comments:

Post a Comment