Sunday 10 December 2017

விநாயகர் டான்ஸ்


ஆனைமுகத்தானின் பதினாறு நாமங்களில் முதன்மையானது "ஸுமுகர்'. இதன் பொருள் "நல்ல முகம் கொண்டவர்'. உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்தால் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படரும். அந்த முகத்திற்கு "ஸுமுகம்' என்று பெயர். "இன்முகம்' என்றும் சொல்வர். ஆனந்தம் வந்து விட்டால் பாட்டும், ஆட்டமும் வந்துவிடும். விநாயகரும் "நிருத்தகணபதி' என்னும் ஆனந்தமயமான நடனக்கோலத்தில் நர்த்தன விநாயகராக பல கோயில்களில் காட்சி தருகிறார். தொப்பை வயிறுடன் நடனமாடும் இவரைத் தரிசிக்கும் குழந்தைகளுக்கும் ஆனந்தம் தானாக வந்து விடும்.

No comments:

Post a Comment