"எங்கே இருக்கிறான் உன் நாராயணன்?'' என்று பிரகலாதனிடம் கேட்கிறான் இரண்யன்.
அவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று பிரகலாதன் பதிலளிக்கிறான்.
இதனை ராமாயணத்தில் சொல்ல வந்த கம்பர், ""சாணிலும் உளன், ஒரு தன்மை அணுவினை சத கூறிட்ட கோணிலும் உளன்!'' என்கிறார். அணுவை நூறு கூறாகப் பிளந்தால் உண்டாகும் துகளுக்கு "கோண்' என்று பெயர். இதையே ""தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்' என்று சொல்வர். கோண் என்பது துரும்பை விட மிக மிக நுட்பமானது. அணுவை நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என்று எந்த வெளிநாட்டாருக் கும் சொல்லிக்கொள்ள உரிமையில்லை.
"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறள்' என்று அவ்வையாரும் குறிப்பிடுகிறார். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய குறளில், அணுவை கூறுகூறாக்கி, அதற்குள் ஏழு கடல் நீரைப் புகுத்தி, அதையும் துண்டு துண்டாக்கியது போல் பொருள் பொதிந்ததாக திருக்குறள் உள்ளது என்று அவர் பாராட்டுகிறார். எனவே, அணுவில் நூறில் ஒரு பகுதியே "கோண்' என்று நமக்கெல்லாம் அறிவித்த கம்பரும், அணுவை கூறாக்கலாம் என்று அறிவித்த அவ்வையாருமே அணு பற்றிய தகவலை உலகுக்கு முதலில் அறிவித்தவர்கள் என்று நாம் பெருமை கொள்ளலாம்.
No comments:
Post a Comment