Saturday 9 December 2017

ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய மூன்று தத்துவங்கள்

iyyappa_pagthar

சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு உகந்த மாதம் கார்த்திகை. இந்த மாதத்தில் மாலை அணிந்து மார்கழியில், அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பன் சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். அவ்வாறு மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்யும் பக்தர்கள் முப்பெரும் தத்துவங்களின் ஓர் உருவமாகத் திகழ்பவர்கள் என்பார்கள். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

சபரிமலை பக்தர்களின் முப்பெரும் தத்துவங்களாக விளங்குவது அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகும். அதில் அத்வைதம் என்பது பிரம்மம் என்பதாகும். விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு, பிரம்மம் வேறு என்பதாகும். துவைதம் என்பது பிரம்மமும், ஜீவனும் வேறு என்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்பதாகும்.

மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அத்வைதத் தத்துவப்படி அஹம்பிரம்மாஸ்மி - தானே கடவுளாகத் திகழ்கிறார். அவரை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் கூறுகின்றனர்.

அடுத்து, விரதம் முடித்து சபரிமலை ஸ்ரீ ஐயப்ப தரிசனத்திற்கு செல்லும் நேரத்தில், ஜீவன் வேறு பிரம்மம் வேறு. முயற்சித்தால் ஜீவன், பிரம்மனைக் காணலாம் என்று விசிஷ்டத்தைத் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

சுவாமி ஐயப்பனைக் கண்டு அவனருளில் சங்கமிக்கும் நேரத்தில் பிரம்மமும்-ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்ற துவைத தத்துவத்திற்கு உதாரணமாய்த் திகழ்கிறது. இப்படி அர்த்தமுள்ள முப்பெரும் தத்துவங்களின் உருவாகத் திகழ்பவர்கள் தான் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள்.

No comments:

Post a Comment