Thursday 7 December 2017

மனதையே கடவுள் பார்க்கிறார்


வில்லாளன் என்ற வேடன் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, புற்றுக்குள் இருந்த முனிவர் ஒருவர் "ஓம் நமோ நாராயணாய' என்று மந்திரம் ஓதுவதைக் கேட்டான். அவரிடம் "நாராயணன்' என்றால் யார் என்பதைக் கேட்டு அறிந்தான். அந்த மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிட்டும் என்றும், அதன்பின் இப்படி மிருகங்களைக் கொன்று வயிறு வளர்க்கும் அவலநிலை வராது என்பதையும் உணர்ந்தான். அவனது தாய் வில்லியிடம் சென்று, தானும் தவமிருந்து நாராயணனை அடையப்போவதாகக் கூறினான். வில்லி அவனிடம், ""மாமிசம் சாப்பிட்டவர்களுக்கு தவவாழ்வு கைகூடாது,'' என்றாள். ஆனால், தன்னால் அது முடியும் என சவால் விட்டவன், உறுதியுடன் நின்று வெற்றி பெற்றான். பெருமாள் அவனுக்கு மலையளவுக்கு தங்கம் தந்தார். அதை தனக்காக பயன்படுத்தாத வில்லாளன், தன் தாயின் பெயரால் வில்லிப்புத்தூர் என்ற ஊரை நிர்மாணித்தான். மனதையே கடவுள் பார்க்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

No comments:

Post a Comment