Thursday 7 December 2017

பொறுமையின் திலகம்


ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றால் நினைவுக்கு வருபவள் ஆண்டாள். இவள் பூமாதேவியின் அம்சம். தர்மத்தைக் காக்க, பல அவதாரங்கள் எடுத்த திருமால், அர்ச்சாவதாரமாக பூமிக்கு வர முடிவெடுத்தார். அவரோடு லட்சுமியை அழைத்தார். ஏற்கனவே ராமாவதாரத்தில் சீதையாகவும், கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியாகவும் வந்த லட்சுமி தாயார், ""போதும் சாமி! இப்போது எந்த ராவணனிடத்தில் என்னை ஒப்படைக்கப் போகிறீர்! அந்த சத்யபாமா வீட்டுக்கு இன்னொரு தடவை போகலாம் என கனவு காண்கிறீரா!'' என்றெல்லாம் கேள்வி கேட்டு விட்டாள். ஸ்ரீதேவியாகிய லட்சுமி மறுத்து விட்டதால், பூதேவியான பூமாதேவியின் பக்கம் திரும்பினார் திருமால். அதற்காகவே காத்திருந்தது போல், அவருடன் கிளம்பி விட்டாள் அவள். அந்த தாயே ஆண்டாளாக பூமியில் அவதரித்தாள். பூமாதேவி பொறுமையின் சின்னமல்லவா! பூமியில் நாம் செய்கிற அட்டூழியங்களை எல்லாம் தாங்கிக் கொள்ளும் பொறுமையுள்ள அவளே ஆண்டாளாய் வந்து திருமாலையே ஆண்டாள்.

No comments:

Post a Comment